Posts

Showing posts from April, 2011

கோலம்

Image
காலையில் அவள் போட்ட  கோலத்தை விட  அழகாக இருந்தது  அதனை சுற்றி இருந்த  அவளது பாத சுவடுகள்..............  
Image
Maturity (முதிர்ச்சி ) is Not,When we start speaking big thinks   But ., Actually it is, When we start understanding small things "

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த இனிய  தருணத்தில்  எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்  அறியாமை அகலட்டும்  சாதி ,மத பேதங்கள் மறைந்து  "தமிழினம்" உயரட்டும்.. வாழ்க தமிழ்நாடு ! வளர்க தமிழ் ! வெல்க தமிழ் குடிகள் ! 

Thanks

Image
வலைப்பூவிற்கு வருகை தந்து என்னை வழிநடத்தும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .............. உங்கள் வருகையை எதிர்பார்த்து ........

என் நட்பு

Image
தன் உயிர் பிரிவதை  கண்டதில்லை இதுவரை எவரும் நான் கண்டேன்  நீ என்னை விட்டு பிரிந்த போது.....என் நட்பே.........

அப்பாவின் அன்பு

Image
  அப்பாவின் அன்பு   எப்படி எப்படி   எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார்   அப்பா ... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான்   கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை ... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என ... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .. ? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார் .. ? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது   பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில் ...  அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்...